9,471 வாக்குகள் வித்தியாசத்தில் சத்தியபாமா வெற்றி
Oct 9, 2026, 19:04 IST1791552865258
தாராபுரம் தொகுதியில் தவெக வேட்பாளர் சத்தியபாமா வெற்றி பெற்றுள்ளார்.
தாராபுரம் தொகுதியில் தவெக வேட்பாளர் சத்தியபாமா வெற்றி பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் சுகன்யாவை 9,471 வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற சத்தியபாமாவுக்கு மொத்தம் 6,841 வாக்குகள் கிடைத்துள்ளன. தாராபுரத்தில் அதிமுகவின் பானுமதி 45,280, நாம் தமிழர் கட்சி கார்த்திகா 5,268, இந்திய கம்யூனிஸ் லட்சுமணன் 1,157 வாக்குகள் பெற்றுள்ளார்.
தாராபுரத்தில் த.வெ.க வெற்றி பெற்றதை முன்னிட்டு வேட்பாளர் சத்யபாமாவுக்கு அமைச்சர் செங்கோட்டையன் இனிப்பு ஊட்டி விட்டார். பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கி கொண்டாடிய வேட்பாளர் சத்யபாமா, நல்ல ஆட்சிக்கும் நல்ல தலைமைக்கும் கிடைத்த வெற்றி.. தாராபுரம் மக்களுக்கு நல்ல காலம் என பேட்டியளித்துள்ளார்.

