டம்மி பதவியில் சத்திய பிரதா சாகு! பரபரப்பு பின்னணி

 
சத்யபிரதா சாகு

நீர் வளத்துறை முதன்மைச் செயலாளராக இருந்து பணியிட மாற்றம் செய்யப்பட்ட சத்யபிரத சாகு, பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை முதன்மைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Image

நீர்வளத் துறை செயலாளராக இருந்த சத்ய பிரதா சாகூ திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். இந்த துறையில் அவர் நியமிக்கப்பட்டு இரண்டு மாதங்கள் கூட ஆகாத நிலையில் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர் மீது சில குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டது. பணம் வாங்கியதாகவும் மற்றும் கூடுதலாக கார் வைத்திருந்ததாகவும் புகார் கூறப்பட்டது. ஆனால் அரசு சார்பில் காவிரி விவகாரத்தில் மெத்தனமாக செயல்பட்டதாலேயே மாற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீர் வளத்துறை முதன்மைச் செயலாளராக இருந்து பணியிட மாற்றம் செய்யப்பட்ட சத்யபிரத சாகு, பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை முதன்மைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை இயக்குநராக இருந்த கலைசெல்வி மோகன் சமக்ரக சிக்‌ஷா அபியான் திட்டத்தின் மாநில திட்ட இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.