தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு நாளுக்கு நாள் சீரழிந்து வருகிறது- சசிகலா

 
சசிகலா

திமுக தலைமையிலான ஆட்சியில்‌ தமிழ்நாட்டில்‌ சட்டம்‌ ஒழுங்கு நாளுக்கு நாள்‌ அழிந்து வருவது மிகவும்‌ வேதனையளிப்பதாக சசிகலா தெரிவித்துள்ளார். 

சசிகலா

இதுதொடர்பாக சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருப்பூர்‌ மாவட்டம்‌, பல்லடம்‌ அருகே கள்ளக்கணறு என்ற இடத்தில்‌ தனது வீட்டின்‌ அருகே மது குடித்ததை கண்டித்ததற்காக இரண்டு பெண்கள்‌ உள்பட நான்கு நபர்கள்‌ கொடுரமாக வெட்டி கொலை செய்யப்பட்டு இருப்பது மிகவும்‌ அதிர்ச்சியையும்‌, வேதனையையும்‌ அளிக்கிறது.  பல்லடம்‌ அருகே கள்ளக்கிணறு என்ற பகுதியில்‌ வசிக்கும்‌ செந்தில்குமார்‌ என்பவர்‌ தனது விட்டிற்கு அருகே, அங்கு வழக்கமாக அமர்ந்து மது குடித்துக்கொண்டு இருந்தவர்களை எச்சரித்து அங்கிருந்து செல்லுமாறு கூறியபோது, அங்கு மது குடித்து கொண்டு இருந்தவர்கள்‌ தங்களிடம்‌ மறைத்து வைத்து இருந்த அரிவாளால்‌ செந்தில்குமாரை சரமாரியாக வெட்டி சாய்த்ததோடு, தடுக்க வந்த செந்தில்குமாரின்‌ உறவினர்களான மோகன்ராஜ்‌, ரத்தினம்பாள்‌ மற்றும்‌ புஷ்பவதி ஆலயோரை வெட்டியதில்‌, நான்கு நபர்களும்‌ பரிதாபமாக உயிரிழந்து இருப்பதாக வரும்‌ செய்திகள்‌ மிகவும்‌ அதிர்ச்சியை அளிக்கின்றன. 

திமுக தலைமையிலான ஆட்சியில்‌ தமிழக மக்களின்‌ பாதுகாப்பு ஒவ்வொருநாளும்‌ கேள்விக்குறியாக வருவது மிகவும்‌ கவலையளிக்கிறது. இதன்‌ மூலம்‌ தமிழகத்தில்ல்‌ சட்டம்‌, ஒழுங்கு எந்த லட்சணத்தில் காப்பாற்றப்படுகிறது என்பதை திமுக தலைமையிலான அரசு நாள்தோறும்‌ நிரூபித்து கொண்டே இருக்றெது.  திமுகவினரின்‌ நிர்வாக திறமையின்மையால்‌, சட்டம்‌ ஒழுங்கு முற்றிலும்‌ கெட்டு ஏழை எளிய சாமானிய மக்கள்‌ பாதுகாப்பின்றி மிகவும்‌ பாதிக்கப்படுகிறார்கள்‌. 

இன்றைக்கு தமிழகத்தில்‌ கொலை, கொள்ளை, வழிப்பறி, செயின்‌ பறிப்பு, பாலியல்‌ அத்துமீறல்கள்‌ போன்ற சட்ட விரோத செயல்கள்‌ நாளுக்கு நாள்‌ அதிகரித்து கொண்டே வருவதையும்‌, இதன்‌ காரணமாக தமிழகத்தின்‌ பொது அமைதி முற்றிலும்‌ சீர்குலைந்து வருவதையும்‌ வன்மையாக கண்டிக்கின்றேன்‌.  தமிழகத்தில்‌ மது விற்பனை எந்த வித கட்டுப்பாடும்‌ இல்லாமல்‌ நடைபெறுறெது. அரசு டாஸ்மாக்‌ கடைகளுக்கு அருலேயே அதிகாலை முதல்‌ எந்நேரமும்‌ மதுபானம்‌ விற்கப்படுகிறது.

சசிகலா பேட்டி

திமுக அமைச்சரோ காலை 7 மணிக்கே டாஸ்மாக்கில்‌ மது விற்பனை தொடங்க ஆலோசிப்பதாக கருத்து கூறுகிறார். மேலும்‌ மது விற்பனையை அதிகப்படுத்துவதற்காக சிறிய அளவிலான டெட்ரா பாக்கெட்டுகளில்‌ மது விற்பனை செய்ய திமுக அரசு முயற்சி செய்துகொண்டு இருக்கிறது. மேலும்‌, தமிழகத்தின்‌ மூலை முடுக்கெல்லாம்‌ இன்றைக்கு கள்ளச்சாராய விற்பனை அமோகமாக நடக்கிறது. எனவே, திமுக தலைமையிலான அரசு மதுவை ஒழிக்க தேவையான நடவடிக்கைகளில்‌ ஈடுபடுவதை விட்டுவிட்டு, மது விற்பனையை எவ்வாறு அதிகப்படுத்துவது என்பதில்தான்‌ தனது முழு கவனத்தையும்‌ செலுத்தி வருகிறது.  

புரட்சித்தலைவி அம்மா அவர்கள்‌ ஆட்சிக்‌ காலங்களில்‌ கட்டப்பஞ்சாயத்து செய்பவர்கள்‌, சமூக விரோதிகள்‌ போன்றோர்‌ தமிழகத்தில்‌ எங்கு இருக்கிறார்கள்‌ என்று தேடி பார்கின்ற வகையில்‌ இரும்பு கரம்‌ கொண்டு சட்டம்‌ ஒழுங்கை காப்பாற்றினார்கள்‌. ஆனால்‌ இன்றோ கட்டப்பஞ்சாயத்து, சட்டவிரோத செயல்கள்‌ போதை பொருட்கள்‌ கடத்துவது போன்ற சட்டத்திற்கு புறம்பான செயல்களை தடுப்பதற்கு எந்தவித முயற்சிகளும்‌ எடுக்காமல்‌, அனைத்தையும்‌ திமுக தலைமையிலான அரசு கைகட்டி வேடிக்கை பார்த்துவருவது மிகவும்‌ கண்டிக்கத்தக்கது.  மேலும்‌, திமுக தலைமையிலான ஆட்சியில்‌ சட்டத்தை மதித்து காப்பாற்றவேண்டிய அமைச்சர்களே கல்‌ எறிந்து அடிப்பதும்‌, ஆட்களை தூண்டி தனது கட்சியினரை தாக்குவதும்‌, பொதுமக்களை தரக்குறைவாக பேசுவதும்‌ இன்றைக்கு வாடிக்கையாகிவிட்டது. 

இதை பார்க்கும்‌ ரவுடிகளும்‌, சட்ட விரோத செயல்களில்‌ ஈடுபடுபவர்களும்‌ எந்தவித அச்சமின்றி, தைரியத்தோடு அனைத்துவித குற்றங்களையும்‌ தமிழகத்தில்‌ நாள்தோறும்‌ செய்து வருகின்றனர்‌. மேலும்‌, தமிழகத்தில்‌ நடைபெறும்‌ பல்வேறு சட்டவிரோத செயல்களில்‌, திமுகவினரே பெரும்பாலும்‌ சம்பந்தப்பட்டு இருப்பதால்‌ தமிழக காவல்துறையும்‌ சட்டம்‌ ஒழுங்கை காப்பாற்றமுடியாமல்‌ திணறி வருகிறது.

சசிகலா

தமிழக மக்கள்‌ நடப்பதையெல்லாம்‌ சுண்கூடாக பார்த்துக்கொண்டுதான்‌ இருக்கிறார்கள்‌. அடுத்து வர இருக்கும்‌ நாடாளுமன்ற தேர்தலில்‌ திமுகவினரையும்‌, அவர்களோடு கூட்டு சேர்ந்து இருப்பவர்களையும்‌ முற்றிலும்‌ புறக்கணிக்க தமிழக மக்கள்‌ தயாராகவிட்டார்கள்‌. வாக்களித்த மக்களுக்கு துரோகம்‌ இழைக்கும்‌ திமுகவினருக்கு தக்க பாடம்‌ புகட்ட தமிழக மக்கள்‌ காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.  எனவே, திமுக தலைமையிலான அரசு நாள்தோறும்‌ நடக்கின்ற அத்துமீறல்களையும்‌, அராஜகங்களையும்‌ கைகட்டி வேடிக்கை பார்ப்பதை விட்டுவிட்டு, தமிழக மக்களின்‌ நலனைக்‌ கருத்தில்‌ கொண்டு சட்டம்‌ ஒழுங்கை பாதுகாக்க வேண்டும்‌.

மேலும்‌, பல்லடத்தில்‌ மது குடித்ததை தட்டிக்கேட்ட செந்தில்குமார்‌ உள்ளிட்ட நான்கு நபர்களை படுகொலை செய்தவர்கள்‌. யாராக இருந்தாலும்‌ அவர்கள்‌ மீது உரிய நடவடிக்கை எடுத்து, உயிரிழந்த குடும்பத்தினருக்கு நியாயம்‌ வழங்கவேண்டும்‌, தமிழக மக்கள்‌ அச்சமின்றி வாழும்‌ வகையில்‌ தேவையான நடவடிக்கைளை விரைந்து எடுத்து மக்களுடைய பாதுகாப்பினை உறுதி செய்திட வேண்டும்‌ என திமுக தலைமையிலான இந்த விளம்பர அரசைக்‌ கேட்டுக்கொள்கறேன்‌” எனக் குறிப்பிட்டுள்ளார்.