“விருப்ப மனுக்கள் வழங்கலாம்”- சசிகலா அதிரடி அறிவிப்பு
அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வி.கே.சசிகலா சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விருப்பமனு வழங்கலாம் என அழைப்பு விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடைபெற உள்ள தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில சட்டமன்றப் பேரவைத் தேர்தலில், அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட அனுமதி கோரும் கழக உடன்பிறப்புகளிடமிருந்து 18-03-2026 புதன் கிழமை அன்று காலை 11.00 மணி முதல் விண்ணப்பங்கள் பெறப்படும். 22-03-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு 7 மணி வரை விண்ணப்பப் படிவங்கள் பூர்த்தி செய்து வழங்கலாம். மற்ற அனைத்து நாட்களிலும் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை உரிய கட்டணத் தொகையைச் செலுத்தி, விண்ணப்பப் படிவங்களைப் பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம். கழக உடன்பிறப்புகள் விண்ணப்பப் படிவங்களை போயஸ் கார்டன். ஜெயலலிதா இல்லத்தில் உள்ள முகாம் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

