ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கட்சியை வழிநடத்த சசிகலா என்னிடம் பேசினார் :செங்கோட்டையன்..!!

 
Q Q

கோபிசெட்டிபாளையத்தில் தனது ஆதரவாளர்களுடன் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார் அப்போது இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக செங்கோட்டையன் வீட்டிற்கு ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் வருகை தந்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஆலோசனை நடத்தியுள்ளனர்.பின்னர் செங்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அதிமுக உடைந்து விடக்கூடாது என்பதற்காக எனக்கு வந்த இரண்டு வாய்ப்புகளையும் விட்டுக் கொடுத்தேன். அதிமுகவுக்காக என்னை அர்ப்பணித்துக் கொண்டேன் ஒருமுறை தோற்றால் மறுமுறை வரலாறு வெற்றி பெறுவார் என்று கூறியவர் ஜெயலலிதா.

எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆவதற்கான பரிந்துரை கடிதத்தில் கையெழுத்து பெற்றுப் படித்துக் காட்டியவர் நான் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கட்சியை வழிநடத்த சசிகலா என்னிடம் பேசினார்.ஆனால் நான் எடப்பாடி கே.பழனிசாமியை பரிந்துரைத்தேன்.

மேலும் அவர் கூறுகையில் பொதுச்செயலராக பதவியேற்ற பிறகு ஒருமுறை கூட வெற்றி பெறாதவர் கே.பழனிசாமி என கூறினார்