"ரொம்ப கஷ்டமா இருக்கு... படுத்தால் தூக்கமே வரவில்லை" - சசிகலா
பலவீனமாக உள்ள அ.தி.மு.க.வை நான் சரி செய்வேன் என சசிகலா கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, “பாஜக கூட்டணியிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் வெளியேறியது குறித்து அவரிடம்தான் கேட்க வேண்டும். அதிமுக பலவீனமாக உள்ளது. அதை மாற்றுவதுதான் என்னோட பணி என சொல்லிவருகிறேன். நிச்சயமாக அதனை செய்வேன். இவர்கள் செய்து வைத்துள்ள சிக்கல்களை அனுபவம் உள்ளவர்களால் தான் சரி செய்ய முடியும். அதுதான் உண்மை. தமிழ்நாட்டு மக்களை பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது. படுத்தால் தூக்கமே வரவில்லை. நிச்சயம் 2026 தேர்தலில் திமுகவை வர விடமாட்டேன். ஜெயலலிதா வீட்டிலேயே இருக்கிறார் என்று சொன்னார்களே... இப்போது தெரிகிறதா அவர் இல்லாத கஷ்டம்? ரோட் ஷோ நடத்துவது முதலமைச்சர் வேலையில்ல; நிர்வாகத்தை பார்ப்பதுதான் அவங்க வேலை. திமுக அரசு வெற்று விளம்பரங்கள் மூலம் மக்களை ஏமாற்றிவருகிறது. தமிழகத்தில் மீண்டும் ஆட்சிக்கு வர துடிக்கும் திமுகவின் கனவு நிறைவேறாது” என்றார்.

