தேர்தலில் தனித்துப் போட்டி- சசிகலா பரபரப்பு பேட்டி

 
சசிகலா பேட்டி

அம்மா ஆட்சியை கொண்டு வர, என்ன வேண்டுமானாலும் செய்வேன் என சசிகலா சூளரைத்துள்ளார்.

சசிகலா

பேரறிஞர் அண்ணாவின் 57-ம் ஆண்டு நினைவு நாளில், அவரது நினைவிடத்தில் வி.கே.சசிகலா அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, “அம்மா வழியில், புரட்சித் தலைவர் வழியில் மக்களாட்சியை கொண்டு வருவதற்கு 39 வருட அனுபவத்தில் என்னால் என்ன செய்ய முடியுமோ செய்வேன். அம்மா ஆட்சியை கொண்டு வர, என்ன வேண்டுமானாலும் செய்வேன். திமுக அரசாங்கத்தை விரட்டி அடிப்பேன். தேசிய ஜனநாயக கூட்டணியில் டிடிவி தினகரன் இணைந்தது குறித்து கருத்து கூற முடியாது. மேலும் வருகிற சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு எதிரிகளையும், துரோகிகளையும் தோற்கடிப்போம். அனுமதி இல்லாமல் செயல்பட்ட கல்குவாரி குறித்டு செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த விசாரணை எப்படி போகும்னு தெரியவில்லை. உண்மையா சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அம்மா இருந்தபோது இந்த அரசாங்கம் எப்படி இருந்தது என்று மக்களுக்கு தெரியும்.

ஒவ்வொரு கட்சியும் யாருடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்களோ அவர்களுடன் கூட்டணி அமைத்துக்கொள்வார்கள். அதனால் கூட்டணி குறித்து என்னால் கருத்து சொல்ல முடியாது.அம்மா வழியில் ஆட்சி நடக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய திட்டம். அதனை நான் நல்ல முறையில் செயல்படுத்துவேன்" என்று பேசியிருக்கிறார்.