“காவல்துறையின் மெத்தனப்போக்குத்தான் முதல் காரணம்”- சசிகலா
Updated: Sep 28, 2025, 15:07 IST1759052226203
திமுக அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர் என சசிகலா கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, “கரூர் கூட்ட நெரிசல் விபத்துக்கு காவல்துறையின் மெத்தனப்போக்குத்தான் முதல் காரணம். மாநில அரசு மட்டும் விசாரணை மேற்கொண்டால் சரியாக வராது. மத்திய அரசு தலையிட்டு உண்மையான தீர்வு காண வேண்டும். காவல்துறையில் கையில் வைத்திருக்கும் முதல்வர், சும்மா வந்தோம் பார்த்தோம்னு இருக்கக்கூடாது. உட்கார்ந்து வேலை செய்ய வேண்டும்.
பிரசாரத்திற்கு சரியான இடம் கொடுக்கப்படவில்லை. காவல்துறையின் மெத்தனப் போக்குதான் முதல் காரணம். அரசின் மேல் மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது. மத்திய அரசு தலையிட்டு தீவிர விசாரணை செய்ய வேண்டும்” என்றார்.

