அரசு பேருந்துகளில் ஏறவே மக்கள் பயப்படுகின்றனர்- சசிகலா

 
சசிகலா பேட்டி சசிகலா பேட்டி

தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சி நடக்கிறது, மக்களுக்கு எந்தவித நன்மையும் திமுக அரசு செய்யவில்லை என திருத்துறைப்பூண்டியில் சசிகலா பேட்டியளித்தார்.

பிரதான கட்சியான அதிமுக இடைத்தேர்தலில் போட்டியிடாதது தவறு- சசிகலா

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பிரசித்தி பெற்ற பிறவி மருந்தீஸ்வரர் கோவிலில் சித்திரை பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது . இந்த நிகழ்வில் வி.கே. சசிகலா அவருடைய சகோதரர் திவாகரன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். முன்னதாக சொந்த ஊருக்கு வருகை தந்த விகே சசிகலாவிற்கு கட்சி தொண்டர்கள் மற்றும் திருத்துறைப்பூண்டி தாலுகா லாரி உரிமையாளர் நலச் சங்கத்தினர் மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்ப்பளித்தனர். தொடர்ந்து பிறவி மருந்தீஸ்வரர் கோவிலில்சாமி தரிசனம் செய்துவிட்டு  வெளியே வந்த விகே சசிகலா  செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய சசிகலா, "போக்குவரத்து துறை அமைச்சர் பொய்யான செய்தியை பரப்பி வருகிறார் தற்போதைய அரசு பேருந்துகளில் மக்கள் ஏறுவதற்கே பயப்படுகின்றனர். புரட்சித்தலைவி அம்மா கொடுத்த மக்களாட்சி மீண்டும் கொண்டு வருவோம் தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சி நடக்கிறது. மக்களுக்கு எந்தவித நன்மையும் திமுக அரசு செய்யவில்லை. பேரூராட்சிகளை நகராட்சிகளாக்கும் பணிகளில் இந்த அரசு மிக தீவிரமாக உள்ளது. அம்மாவின் ஆட்சியின்போது மக்களுக்காக பல நல்ல திட்டங்களை செயல்படுத்தினார். மக்கள் தன்னுடன் உள்ளதால் வரும் சட்டமன்றத் தேர்தலில் தனது பங்கு மிக மிக அதிகமாக இருக்கும். இந்த அரசிடமிருந்து தமிழக மக்களுக்கு விரைவில் விடிவுகாலம் பிறக்கும்" என தெரிவித்தார் .