விவேக்கின் மனைவி தற்கொலை முயற்சி.. சசிகலா வீட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..

 
விவேக்கின் மனைவி தற்கொலை முயற்சி..  சசிகலா வீட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..

சசிகலா அண்ணன் மகன் விவேக்கின் மனைவி, தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை விழுங்கி அவர்  தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.  

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியும், அரசியல் பிரமுகருமான சசிகலாவின் அண்ணன் மகன் தான் விவேக் ஜெயராமன். சென்னை, பட்டினப்பாக்கம், எம்ஆர்சி நகர் பிரீஸ் கார்டனில் வசித்து வரும் இவர்,  ஜாஸ் சினிமா நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார்.  விவேக்கும் - கீர்த்தனா என்கிற பெண்ணுக்கும்  ஜெயலலிதா தலைமையில் கடந்த 2016ம் ஆண்டு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டன.  ஆனால் ஜெயலலிதா விவேக் திருமணத்தில் பங்கேற்கவில்லை. மாறாக  வாழ்த்து கடிதம் மற்றும் பரிசு பொருட்களை அனுப்பி வைத்திருந்தார். பின்னர் சசிகலாவின் தலைமையில் விவேக்- கீர்த்தனா ஜோடிக்கு  பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது.

sasikala
 
பிரபல அபார்ட்மென்ட்டில்  இருவரும்  தனியாக வசித்து வரும் நிலையில், வயதாகிறது.. கணவன் -மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.  கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கவே, அடிக்கடி சண்டை வந்துகொண்டிருந்தது. இந்தனையடுத்து இந்த விவகாரத்தை, தன்னுடைய மாமியாரான இளவரசியிடமும், தன் கல்யாணத்தை நடத்தி வைத்த சசிகலாவிடமும் கொண்டு போயிருக்கிறார் கீர்த்தனா. ஆனால், சசிகலா, இளவரசி உள்பட குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் யாரும்   விவேக்கை   கண்டிக்கவில்லையாம்..  

விவேக்கின் மனைவி தற்கொலை முயற்சி..  சசிகலா வீட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு விவேக் வீட்டிற்கு தாமதமாக  வந்த நிலையில்,  இருவருக்கும் இடையே சண்டை வெடித்துள்ளது.  இதனையடுத்து திடீரென கீர்த்தனா வீட்டில் இருந்த, தூக்க மாத்திரை உள்ளிட்ட தேவையில்லாத மாத்திரைகளை அதிகளவில் விழுங்கி தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்.  சிறிது நேரத்தில் அவர் மயங்கியதை பார்த்த விவேக், அதிர்ந்து போய்.. உடனடியாக, மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்.  அங்கு கீர்த்தனாவுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.. பின்னர்  மருத்துவர்கள் பரிந்துரையின்படி, அடையாறில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட  கீர்த்தனா ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பட்டினப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.