அனைவரது வாழ்விலும் வளமும், நலமும் பெருகட்டும் - சசிகலா தீபாவளி வாழ்த்து!

 
sasikala


அனைவரது வாழ்விலும் வளமும், நலமும் பெருகட்டும் - சசிகலா தீபாவளி வாழ்த்து!தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக மக்களுக்கு சசிகலா வாழ்த்து தெரிவித்துள்ளார். 

சசிகலா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தீபத் திருநாளாம் தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடனும். உற்சாகத்துடனும் கொண்டாடும் இந்நன்னாளில் மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த தித்திக்கும் தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நரகாசுரன் எனும் கொடிய அரக்கன் தனது கொடுஞ்செயல்களால் மக்களையும், தேவர்களையும் பெருந்துன்பத்திற்கு ஆளாக்கினான். அக்கொடியவனை மகாலட்சுமி துணையுடன் திருமால் அழித்த தினமே தீபாவளி திருநாளாக கொண்டாடப்படுகிறது. இந்தத் திருநாள், இருளை நீக்கி, ஒளியை ஏற்றிடும் தினமாகவும்,சூழ்ச்சிகளும், தீமைகளும் நம்மை விட்டு அகன்று நன்மைகள் பெருகும் நாளாகவும் விளங்குகிறது.


இந்த மகிழ்ச்சிகரமான நாளில் அனைத்து மக்களும், தங்களின் இல்லங்களை அலங்கரித்தும், தீபங்களை ஏற்றி வைத்தும் புத்தாடைகளை அணிந்தும்; உற்றார் உறவினர்களுக்கு பரிசளித்தும், பட்டாசுகளை வெடித்தும்; இனிப்புகளை பகிர்ந்து உண்டும், உற்சாகத்துடனும், குதுகலத்துடனும் தீபாவளி திருநாளைக் கொண்டாடி மகிழ்கிறார்கள். இந்த இனிய திருநாளில், நாடெங்கும் அன்பும் அமைதியும் தழைக்கட்டும். வேற்றுமை அகன்று ஒற்றுமை ஓங்கட்டும், அனைவரது வாழ்விலும் வளமும், நலமும் பெருகட்டும் என்று எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டி, அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.