ஜெயலலிதா மறைவிற்கு பின் முதல் முறையாக கொடநாடு செல்லும் சசிகலா

 
sasikala

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோடநாடு எஸ்டேட்டிற்கு 7 ஆண்டுகளுக்கு பிறகு வி.கே.சசிகலா பயணம் மேற்கொண்டுள்ளார்.

Image

சென்னையில் இருந்து கொடநாடு புறப்பட்ட சசிகலா, இன்று கொடநாடு பங்களாவில் தங்குகிறார். கொடநாடு செல்வதற்காக சற்றுமுன் சென்னையில் இருந்து விமானம் மூலம் சசிகலா கோவை புறப்பட்டார். அங்கிருந்து நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோடநாடு எஸ்டேட்டிற்கு செல்கிறார். ஜெயலலிதாவின் மறைவிற்கு பின் முதல் முறையாக கொடநாடு எஸ்டேட் செல்கிறார். பங்களா முன்பு ஜெயலலிதா சிலை வைக்க பூமி பூஜை நாளை நடைபெற உள்ளது. இந்த பூஜையில் சசிகலா பங்கேற்கவுள்ளார். கொடநாடு பங்களாவில் ஜெயலலிதாவின் பெயரில் தியான மடம் அமைக்கப்பட உள்ள நிலையில், அதற்கான பூமி பூஜை செய்கிறார். அதன்பின் தனது முக்கிய ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். ஜெயலலிதாவின் முழு உருவ சிலையை பிப்ரவரி 24ல் சசிகலா திறந்து வைக்க உள்ளார்.

கடைசியாக 2016 ஆம் ஆண்டில் சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு ஜெயலலிதா, சசிகலா இருவரும் கொடநாடு எஸ்டேட்டில் தங்கியிருந்தனர். 2017 ஆம் ஆண்டு இந்த பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை சம்பவத்திற்கு பிறகும் சசிகலா இங்கு வராமலேயே இருந்தார்.