நடிகர் டெல்லி கணேஷ் மறைவுக்கு சசிகலா இரங்கல்

 
sasikala sasikala

நடிகர் டெல்லி கணேஷ் மறைவுக்கு சசிகலா இரங்கல் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக சசிகலா தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், தமிழ் திரையுலகின் பிரபல மூத்த நடிகர் திரு. டெல்லி கணேஷ் அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.


திரு. டெல்லி கணேஷ் அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், திரைத்துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.