எம்ஜிஆர், ஜெயலலிதாவின் தொடர்ச்சியாகத்தான் நான் வந்துள்ளேன்- சசிகலா
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் அஇபுதமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் புஷ்பராஜை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா ஆலங்குடி வடகாடு முக்கம் பகுதியில் பரப்புரை மேற்கொண்டு தென்னந்தோப்பு சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
ஆலங்குடியில் பரப்பரை மேற்கொண்ட சசிகலா பேசுகையில், “பெண்களுக்கு சொத்துரிமை சட்டம் கொண்டு வந்தததிலும் சமூக சமூக நீதி போராளியாக திகழ்ந்தவர் அம்பேத்கர். தாழ்த்தப்பட்ட மக்களுக்காக போராடியவர் அம்பேத்கர். இந்த தேர்தல் கட்சிகளுக்கு இடையே தான் போட்டி என்று அனைவரும் நினைப்பார்கள். இது கட்சிகளுக்கான போட்டி என்று கூறமாட்டேன். மக்களுக்கான உரிமைக்கான தேர்தலாகத்தான் நான் நினைக்கிறேன். திமுக அரசு கடந்த ஐந்து ஆண்டுகளில் கடன் மட்டும் 12 லட்சம் கோடி வாங்கி இருக்கிறார்கள். பணத்தை வாங்கி மக்களுக்கு ஏதேனும் செய்தார்களா என்று பார்த்தால் எதுவும் செய்யவில்லை. தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொரு நபர் மீதும் 2 லட்சம் ரூபாய் கடன் வைத்துள்ளனர். மேலும் மேலும் கடனை வாங்குவார்களே தவிர நல்லது செய்ய மாட்டார்கள். குடிதண்ணீர் உள்ளிட்ட எந்தவித அடிப்படையை வசதிகளும் திமுக அரசு செய்து கொடுக்கவில்லை.
ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வந்து வாக்குகளை கேட்பார்கள். டோக்கன் கொடுப்பேன் என்று கூறுவார்கள், பிரிட்ஜ் கொடுப்பேன், பத்தாயிரம் ரொக்கம் கொடுப்பேன் என்றெல்லாம் கூறுவார்கள் அது அவங்க அப்பா பணமா சொந்த பணமோ அல்ல கடன் வாங்கி கொடுக்கக்கூடிய பணம்தான் அது. மேலும் மேலும் உங்கள் மீது கடன் சுமத்தும் வேலையைத்தான் இருவரும் செய்து வருகின்றனர். காயப்பட்ட மக்களுக்கு செய்யக்கூடிய அரசாக நாம் இருப்போம். எம்ஜிஆர் ஜெயலலிதாவும் அப்படித்தான் இருந்தார்கள். அவர்களின் தொடர்ச்சியாகத்தான் நான் இருக்கிறேன். நான் எப்போதும் மக்களுடன் கூட்டணி என்று தான் கூறுவேன். ஏனென்றால் நீங்கள் வாக்களித்து தான் ஒருவரை உருவாக்குவீர்கள். உங்கள் கையில் தான் இருக்கிறது. இரண்டு பேரின் தேர்தல் அறிக்கையை பார்த்தால் தலையே சுற்றுகிறது. இதற்கெல்லாம் பணத்திற்கு அவர்கள் எங்கே போவார்கள். மக்களிடம் வரி வாங்கி தான் சம்பளமே போடுகின்றனர். இதுதான் தமிழ்நாட்டின் நிலைமை.
ஜெயலலிதாவின் ஆட்சியில் மின்கட்டணம் 150 ரூபாய் கட்டினார்கள் தற்போது 280 ரூபாய் மின்சாரம் கட்டணமாக கட்டுகின்றனர். 500 யூனிட் செலவழித்தால் 1875 ரூபாய் அதிகம் வாங்குகின்றனர். ஏழை மக்கள் மின்சாரம் பயன்படுத்தும் போது அவர்களிடம் எக்கச்சக்கமாக பணம் வாங்குகின்றனர். அப்படி வாங்க கூடிய நிலையில் மாதம் ஆயிரம் தற்போது 2000 என்பதெல்லாம் ஊரை ஏமாற்றும் வேலை. ஒவ்வொன்றுக்கும் வரியை ஏற்றி வருகின்றனர். மக்களிடம் வாங்கி தான் அரசாங்கத்தை நடத்துகின்றனர். ஜெயலலிதா இருக்கும்போது ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி கடன். அதில் தான் மிக்ஸி,கிரைண்டர்,லேப்டாப்,நோட் புத்தகம்,ஜாமென்ட்ரி பாக்ஸ் அதுமட்டுமில்லாமல் சீருடை மாறி மாறி கொடுத்தார்கள். அவர்கள் மட்டும் எப்படி குறைந்த கடன் வைத்துக் கொண்டு இதை எல்லாம் கொடுத்தார்கள். அவர்கள் சிக்கன நடவடிக்கையை எதில் எடுக்க வேண்டுமோ அதில் எடுத்தார்கள். அதை மிச்சம் செய்து மக்கள் நல்லது செய்தார். தற்போது அதிக கடன் வாங்கி ஊதாரித்தன செலவுகளை செய்கின்றனர். மக்களுக்கு பயன்பெறும் செலவுகளை செய்யவில்லை. தற்போது தண்ணீர் பிரச்சனை அதிகரித்துள்ளது நான்கைந்து குடங்களை வைத்துக்கொண்டு தண்ணீர் பிடிப்பதற்கு மக்கள் அலைகின்றனர். எங்க பார்த்தாலும் கழிவு நீர் குப்பைகள் நிறைந்து இருக்கிறது. காசு மேல் காசு போட்டு விளம்பரம் போட்டு ஆட்சி வந்தால் கண் கொள்ளா காட்சியாக இருக்கும் என்று விளம்பரப்படுத்துகின்றனர். இவர்கள்தான் ஐந்தாண்டு ஆட்சி நடத்தினார்கள். கிராமப்புறங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் பூட்டி கிடைக்கிறது.
எங்கள் தேர்தல் அறிக்கையில் கிராமப்புறத்தை தான் நாங்கள் கவனிக்கின்றோம் அதுதான் ரொம்ப மோசமாக இருக்கிறது. ஆண்டுதோருமா ஒரு லட்சம் பெண்களுக்கு கோழிப்பண்ணை ஒரு லட்சம் பெண்களுக்கு ஆட்டுப்பண்ணை அமைக்கும் வழிகளை செய்வோம். ஒரு லட்சம் மாடுகள் கொடுப்போம். 50% மானியமாக அரசகட்டி ஏற்பாடு செய்யும். இரண்டு லட்சம் வேலை வாய்ப்பை உருவாக்குவோம் உடனடியாக அரசு வேலையாக. தமிழ்நாடு முழுவதும் மருத்துவமனைகளில் மருத்துவர்கள் இல்லை செவிலியர் இல்லை இந்த நிலையை மாற்றி போர்க்கால அடிப்படையில் பணி அமர்த்துவோம். மாவட்ட தலைநகரங்களில் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கப்படும் முதல்வரின் காப்பீடு திட்டத்தின் கீழ் வருமான வரம்பு சிகிச்சை வரம்பு உயர்த்தப்படும். தற்போது காப்பீடு திட்டத்தில் 1050 சிகிச்சைகள் வழங்கப்படுகிறது. அது 2000 சிகிச்சையாக மாற்றப்படும். மக்களை பாதுகாப்பு அரசாக இருக்கும். ஒரு நூல் கூட தவற மாட்டோம். காரணம் ஜெயலலிதா எம்ஜிஆர் ஆகிய இருவரும் மக்களுக்கான ஆட்சியைத்தான் கொடுத்திருக்கிறார்கள். எம்ஜிஆர், ஜெயலலிதாவின் தொடர்ச்சியாகத்தான் நான் வந்துள்ளேன். ஜெயலலிதாவின் வளர்ப்பில் நான் வந்துள்ளேன், அதிலிருந்து ஒரு துளி கூட மாற மாட்டேன் எப்போதும் மக்களுடன் தான் இருப்பேன்” என்றார்.



