உலக பிசியோதெரபி தினம்- விஜயகாந்த், சசிகலா வாழ்த்து

 
உலக பிசியோதெரபி தினம்- விஜயகாந்த், சசிகலா வாழ்த்து

உலக பிசியோதெரபி தினத்தை முன்னிட்டு தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் சசிகலா வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

விஜயகாந்த்

இதுதொடர்பாக சசிகலா தனது ட்விட்டர் பக்கத்தில், “சிறப்பான அர்ப்பணிப்பு உணர்வோடு தன்னலமற்று சேவையாற்றுகின்ற பிசியோதெரபிஸ்டுகள் தங்கள் நோயாளிகளுக்கும், சமூகத்திற்கும் அளிக்கும் பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் உலக பிசியோதெரபி தினமாக கடைபிடிக்கப்படும் இந்நன்னாளில் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் தங்கள் ஆரோக்கியத்தையும், நல்வாழ்வையும் பராமரிக்க உதவும் வகையிலும், நாள்பட்ட வலி நிவாரணிகளை வழங்குவதிலும் பிசியோதெரபிஸ்டுகள் ஆற்றுகின்ற முக்கிய பங்கீனை அங்கீகரிக்கும் வகையில் உலக பிசியோதெரபி தினம் அனுசரிக்கப்படுவதை எண்ணி பெருமிதம் அடைகிறேன். 

வளர்ந்துவரும் மருத்துவ துறையின் ஒரு அங்கமாக முன்னேறி கொண்டிருக்கும் இயன்முறை மருத்துவத்தின் மூலம் பல்வேறு உடல் உபாதைகளால் தங்கள் வாழ்வையே தொலைத்து விட்ட நபர்களுக்கு அதனை மீட்டு கொடுக்கும் அற்புதத்தை நிகழ்த்திக்காட்டும் பிசியோதெரபிஸ்டுகளுக்கு எனது நெஞ்சார்ந்த உலக பிசியோதெரபி தின நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

sasikala

இதேபோல் விஜயகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், “பிசியோதெரபி மருத்துவ வளர்ச்சி என்பது  நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது.  பிசியோதெரபி சிகிச்சையை இன்றைக்கு பெரும்பாலான மக்கள் நாடுகின்ற நிலை உள்ளது. மருத்துவத்துறையில் பிசியோதெரபி சிகிச்சை முறை இன்றியமையாததாக இருக்கிறது. உலக பிசியோதெரபி தினமாக கடைபிடிக்கப்படும் இந்நன்னாளில் இப்பணியில் ஈடுபட்டு வரும் பிசியோதெரபிஸ்டுகளுக்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.