இன்று மாலை வெளியாகும் சர்தார் 2 டீசர்!
Jul 31, 2026, 16:47 IST1785496657049
‘சர்தார் 2’ திரைப்படத்தின் டீசர், இன்று இரவு 7 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
நடிகர் கார்த்தி நடிப்பில் ஏழைகளின் சங்கர் என அழைக்கப்படும் மித்ரன் இயக்கத்தில் 2022ஆம் ஆண்டு வெளியான சர்தார் படம் விமர்சனம் ரீதியாக நல்ல வரவேற்பு பெற்றது. சுமார் 45 கோடி பட்ஜெட்டில் தயாரான இந்த படம் 90 கோடி வசூல் செய்தது. இந்நிலையில் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்து மாபெரும் வெற்றிபெற்ற 'சர்தார்' படத்தின் இரண்டாம் பாகமான ‘சர்தார்-2’ திரைப்படத்தின் டீசர் இன்று இரவு 7 மணிக்கு வெளியாகிறது.

