ஜெயிக்க போவது நல்ல வில்லனா அல்லது கெட்ட ஹீரோவா? - தெறிக்கவிடும் சர்தார் 2 டீசர்
Jul 31, 2026, 19:24 IST1785506097189
நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குநர் பிஎஸ். மித்ரன் இயக்கத்தில் பெரிய செலவில் உருவாகி இருக்கும் சர்தார் 2 படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிஎஸ். மித்ரன் இயக்கத்தில் அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ளது சர்தார் 2. நடிகர் கார்த்தி நடித்துள்ள இப்படத்தின் முதல் பாகம் 2022ல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இரண்டாம் பாகத்தில் எஸ்.ஜே.சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கார்த்தி நடித்த படங்களிலேயே இப்படம் அதிக பட்ஜெட்டில் உருவாகியுள்ளதால் இப்படத்தின் மீதா எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இப்படம் செப்டம்பர் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது.

