“புலிக்கு பிறந்தது பூனையாகுமா..” தேவயானி மகளை கண்டு ஆச்சர்யமடைந்த சரத்குமார்
நடிகை தேவயானி அவர்களின் மகள் இனியா அவர்கள், புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்பது போல, Zeeதமிழ் தொலைக்காட்சியின் சரிகமப சீசன் 5 போட்டியாளராக, மறைந்த பாடகி பவதாரணி பாடிய மயில் போல பொண்ணு ஒன்னு என்ற பாடலை பாடி நம்மையெல்லாம் மெய்சிலிர்க்க வைத்திருக்கிறார் என நடிகர் சரத்குமார் புகழாரம் சூட்டியுள்ளார்.

இதுதொடர்பாக சரத்குமார் தனது எக்ஸ் தளத்தில், “மக்கள் மனதில் தனக்கென்று ஒரு தனி அடையாளத்தை உருவாக்கிய மாபெரும் திறமையான நடிகை தேவயானி அவர்களின் மகள் இனியா அவர்கள், புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்பது போல, Zeeதமிழ் தொலைக்காட்சியின் சரிகமப சீசன் 5 போட்டியாளராக, மறைந்த பாடகி பவதாரணி பாடிய மயில் போல பொண்ணு ஒன்னு என்ற பாடலை பாடி நம்மையெல்லாம் மெய்சிலிர்க்க வைத்திருக்கிறார். திறம்பட இசையை கற்று நேர்த்தியாக பாடி அசத்தியிருப்பது மிக மிக அருமை. தமிழ் சினிமாவின் மாபெரும் கதாநாயகியின் மகள் என்ற பரிந்துரை கொண்டு, நேரிடையாக திரைப்பட பாடல்களில் பாடி இசையுலகில் தடம் பதித்திருக்க முடியும். ஆனால், தனது சொந்த முயற்சியால் உயர்ந்து சினிமாத்துறையில் கதாநாயகியாக சாதிக்க ஆர்வம் கொண்டு, சரிகமப நிகழ்ச்சி மேடையை சரியாக பயன்படுத்தி, மக்கள் மனதில் இடம்பிடித்திருப்பது பாராட்டுக்குரியது.
மக்கள் மனதில் தனக்கென்று ஒரு தனி அடையாளத்தை உருவாக்கிய மாபெரும் திறமையான நடிகை தேவயானி அவர்களின் மகள் இனியா அவர்கள், புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்பது போல, Zeeதமிழ் தொலைக்காட்சியின் சரிகமப சீசன் 5 போட்டியாளராக, மறைந்த பாடகி பவதாரணி பாடிய மயில் போல பொண்ணு ஒன்னு என்ற பாடலை பாடி… pic.twitter.com/f9O7vZrijO
— R Sarath Kumar (@realsarathkumar) June 2, 2025
தனது இனிய குரல்வளத்தால் இசையில் நம்மை மகிழ்வித்த இனியா, அவரது அதீத திறமையால் சினிமாத்துறையின் பல பாரிமாணங்களிலும், பல்வேறு மொழிகளில் பாடும் வாய்ப்பும் பெற்று வாழ்வில் மென்மேலும் உயர்ந்து, அவரது வருங்காலம் சிறப்பாக அமைய வாழ்த்தி, எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.


