பாக்யராஜ் இறுதி ஊர்வலத்திற்கு உதவிய தமிழக அரசுக்கு நன்றி- நடிகர் சரத்குமார்
திரைக்கதை மன்னன் கே. பாக்யராஜ் அவர்களின் இறுதி ஊர்வலத்திற்கு உதவிய தமிழக அரசுக்கு நடிகர் சரத்குமார் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நடிகர் சரத்குமார் தனது எக்ஸ் தளத்தில், “தமிழ் மக்களின் இதயங்களில் என்றும் நிலைத்திருக்கும், தமிழ்த் திரையுலகின் ஒப்பற்ற சாதனையாளரும், இந்தியாவின் இணையற்ற "திரைக்கதை மன்னன்" அன்பு நண்பர் திரு. K. பாக்யராஜ் அவர்களின் இறுதி ஊர்வலம் மிகுந்த மரியாதையுடனும், கண்ணியத்துடனும் நடைபெற சிறப்பான ஏற்பாடுகளையும் அனுமதியையும் வழங்கிய தமிழக அரசுக்கும், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கும், உறுதுணையாக இருந்த அமைச்சர் பெருமக்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும், ஆரம்பம் முதல் இறுதிவரை உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு, மதிப்புமிக்க நிகழ்வாக நடத்திய தமிழ்நாடு காவல்துறையினருக்கும் எங்களது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
பூர்ணிமா பாக்யராஜ்
சாந்தனு பாக்யராஜ் - கீர்த்தி சாந்தனு
சரண்யா பாக்யராஜ்
ரா.சரத்குமார்
ராதிகா சரத்குமார்
பார்த்திபன் மற்றும் குடும்பத்தினர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

