நாடார் சமதாயமான நாமே ஆளும் இடத்திற்கு வர வேண்டும்- சரத்குமார்

 
’’தனிமனிதர் கூறும் கருத்துகளுக்கு பதில் கருத்தை கேட்காதீர்கள்’’- சரத்குமார்

மதுரையில் நாடார் மகாஜன சங்கம் நடத்திய 72-ஆம் ஆண்டு மாநாட்டில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், சரத்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

சரத்குமார் பிறந்தநாள் ஸ்பெஷல்: உடலைப் பேணி உழைப்பால் உயர்ந்தவர் |  sarathkumar birthday special - hindutamil.in

இந்நிலையில் மாநாடில் பேசிய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், “ காமராஜர் ஆட்சி பொற்கால ஆட்சி. இட ஒதுக்கீடு கேட்காமல் முதலமைச்சர் ஆகக்கூடிய தகுதி நமக்கு இருக்கும்போது மற்ற கட்சிகளை நாடுவதைவிட நாமே ஆளக்கூடிய இடத்திற்கு வர வேண்டும். அதற்காக என்னை முதல்வராக்குங்கள் என சொல்லவில்லை. மற்றவர்களிடம் கேட்பதற்கு பதிலாக நாம் நம்மை உருவாக்கி கொள்ள வேண்டும்” என்றார். 

Image

தொடர்ந்து பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “அரசியலுக்காகவோ, ஓட்டுக்காகவோ இங்கு வரவில்லை. சமூக நீதிக்காக வந்திருக்கிறேன். தமிழகத்தில் கல்வி புரட்சி செய்த காமராஜரை தேசிய தலைவராக பார்க்கிறேன். காமராஜர் இல்லை என்றால் தமிழ்நாடு மிகவும் பின்தங்கி போயிருக்கும். நாம் அனைவரும் ஒன்று சேர்ந்தால் ஆட்சி, அதிகாரம் நம்மை தேடிவரும். நமக்கு தேவை ஒன்றிரண்டு சீட்டுகள் அல்ல; முதலமைச்சர் பதவி என்ற அதிகாரம். நாம் ஒன்று சேர்வது ஒன்றுதான் நமக்கான விடுவு” என்றார்.