பாஜக மாநிலத் தலைவர் பதவி கொடுத்தால் ஏற்பீர்களா? - சரத்குமார் பதில்
பா.ஜ.க. தலைவராக செயல்படலாம் என கட்சி தலைமை கூறும்போது, தனது முடிவை அறிவிப்பேன் என பாஜக நிர்வாகி சரத்குமார் தெரிவித்தார்.
சென்னை மீனம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், "பா.ஜ.க. தலைவராக செயல்படலாம் என கட்சி தலைமை கூறும்போது, எனது முடிவை அறிவிப்பேன். முதலமைச்சர் விஜய் இன்னும் மக்களை நேரடியாக சந்திக்கவில்லை. தமிழகத்தில் இதுவரை பெரிய கலவரம் எதுவும் நடந்ததில்லை. சுமார் ஒரு லட்சம் அளவே உள்ள காவல்துறையினரால் எல்லா இடங்களுக்கும் சென்று பார்க்க முடியாது. ஆங்காங்கே நடக்கும் கொலை, கொள்ளைகளுக்கெல்லாம் அரசு தான் காரணம் என்று சொல்ல முடியாது.
தமிழக அரசு இப்போது ஹனிமூன் பீரியடில் உள்ளது. தமிழக அரசு ஆறு மாதங்கள் அவகாசம் கேட்டுள்ளதால், தற்போது அரசின் செயல்பாடுகளைக் கவனிக்க வேண்டும்.
முதல்வர் விஜய் மக்களை நேரடியாகச் சந்திப்பதைவிட நிகழ்ச்சிகளுக்குச் செல்கிறார். மேலும், எல். முருகன் 2029 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு கட்சிப் பணிகளில் ஈடுபட உள்ளார்" என்றார்.

