"அன்று ஜெ.,விடம் கைகட்டி நின்றாரே விஜய்"- சரத்குமார் ஆவேச பேட்டி

 
"அன்று ஜெ.,விடம் கைகட்டி  நின்றாரே விஜய்"- சரத்குமார் ஆவேச பேட்டி    "அன்று ஜெ.,விடம் கைகட்டி  நின்றாரே விஜய்"- சரத்குமார் ஆவேச பேட்டி   

சென்சார் போர்டு இந்த படத்தை மட்டும் தான் நிறுத்தி இருக்கிறார்களா..? இதற்கு முன்பு விஜயே அவர் படதிற்காக ஜெயலலிதா அம்மா அவர்களை பார்க்க கையை கட்டிக்கொண்டு நின்னுட்டு இருந்தாரே..? என நடிகர் சரத்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், “சென்சார் போர்டு ஒரு படத்தை மட்டும் நிறுத்தவில்லை, இதற்கு முன்பும் பல்வேறு படங்களை நிறுத்தி உள்ளார்கள். தக் லைஃப் படத்திற்கும் இது நடந்தது. விஜயின் படத்திற்கு ஏற்கனவே ஜெயலலிதா ஆட்சி காலத்திலும் இதுபோன்று நடந்ததே, அப்போது விஜய் கைகட்டி நின்றார் தானே.. இது அரசியல் இல்லை. அனைத்தும் அரசியல் ரீதியாகவேதான் நடைபெறுகிறது என்ற எண்ணங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். அரசியல் தலைவராக இருப்பதால் விஜய்க்கு நெருக்கடி அப்படி எல்லாம் இல்லை. ரிலீஸ் ஆகணுங்கற ஆசை எல்லோர்க்கும் இருக்கு... நான் நடித்த அடங்காதே படமும் இன்னும் வரல.. அதுக்கு ஏன் குரல் கொடுக்கல” எனக் கேள்வி எழுப்பினார்.