விஜய்யை நான் இன்னும் அரசியல்வாதியாகவே ஏற்றுக்கொள்ளவில்லை - சரத்குமார்

 
ச் ச்

நடிகர் விஜய்யை நான் இன்னும் அரசியல்வாதியாகவே ஏற்றுக்கொள்ளவில்லை என நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

`மிஸ்டர் பிரைம் மினிஸ்டர்' என்று சொல்லக்கூடிய அளவுக்கு விஜய் இன்னும் வளரல- சரத்குமார்


நல்லை சேவியர் கல்லூரியில் நடைபெற்ற கலைத் திருவிழாவில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும் அதிகமான சரத்குமார் கொம்பு சீவி படத்தின் குழுவினர் பங்கேற்றனர். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகர் சரத்குமார் கூறியதாவது, “ஒரு படத்தை தயாரித்து முடித்தவுடன் வேலை முடிந்து என்று நினைக்காமல் அதை பிரமோட் செய்ய வேண்டும் என்ற சூழல் அதிகமாயிருக்கிறது. 2026-ல் தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து எங்களுடைய மாநிலத் தலைவர் முடிவெடுப்பார் என்று கூறி இருக்கிறேன். போட்டியிட மாட்டேன் என கூறும் பொழுது எந்தெந்த தொகுதியில் நிற்கிறார்கள் என்று எனக்கு தெரியாது. அனைவரும் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக நான் போட்டியிடுவதை விட பிறரை வெற்றி பெற செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் நான் கூறுகிறேன். வாய்ப்பு கிடைக்கும் பொழுது நான் ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறேன், நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்திருக்கிறேன். என்னுடன் இருப்பவர்களுக்கு அந்த வாய்ப்பை வாங்கிக் கொடுத்து அவர்களை வெற்றி பெற செய்தால் சிறப்பாக இருக்கும் என்ற அடிப்படையில் கருத்தை கூறுகிறேன்.

தென்காசியில் நான் போட்டியிட விருப்பப்பட்டால் எங்கள் மாநில தலைவரிடம் கூறுங்கள். நடிகர் விஜய் நிலைப்பாட்டை அவரை போய் கேட்க வேண்டும். அவரை நிற்க வைத்து பத்திரிக்கையாளர்கள் கேள்வி கேட்க வேண்டும். மாணவர்கள் மட்டுமல்ல அனைவருக்கும் அரசியல் பற்று வேண்டும். பாஜகவில் என்னுடைய பயணம் சிறப்பாக இருக்கிறது. கட்சியை புதிது புதிதாக ஆரம்பிப்பது முக்கியமல்ல கொள்கையை வெளி காட்ட வேண்டும். தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜயை நான் இன்னும் அரசியல்வாதியாகவே ஏற்றுக்கொள்ளவில்லை. விஜய் இன்று அரசியலுக்கு வந்தவர். மக்கள் யார் கூப்பிட்டாலும் வரத்தான் செய்வார்கள். 2026 சட்டமன்றத் தேர்தல் எங்களுக்கு தான் சாதகமாக இருக்கும். தமிழக வெற்றிக் கழகம் என்று முழுதாக சொன்னால் எனக்கு எந்த கட்சி என்று தெரியவில்லை. தவெக,இவெக, முவெக என சொன்னால்தான் தெரிகிறது.” என்றார்.