`மிஸ்டர் பிரைம் மினிஸ்டர்' என்று சொல்லக்கூடிய அளவுக்கு விஜய் இன்னும் வளரல- சரத்குமார்
மிஸ்டர் பிரைம் மினிஸ்டர் என்று சொல்லக்கூடிய அளவிற்கு நடிகர் விஜய் அரசியலில் வளரவில்லை என நடிகர் சரத்குமார் கூறியுள்ளார்.

தவெக 2வது மாநில மாநாடு நேற்று மதுரையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் பேசிய தவெக தலைவர் விஜய், திமுக, பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளை கடுமையாக விமர்சித்திருந்தார். அப்போது தவெகவின் ஒரே கொள்கை எதிரி பாஜக தான் என்றும், ஒரே அரசியல் எதிரி திமுக தான் என்றும் கூறியிருந்தார். அத்துடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அங்கிள் என்று அவர் கூறியதும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், “தவெக தலைவர் விஜய்க்கு விஜய்க்கு பாசிசம்னா என்னன்னு தெரியுமான்னு எனக்கு தெரியல. அரசியலுக்கு வந்தபிறகு என்ன பேசுறோம், எதற்காக பேசுறோம் என்பதைப் புரிந்து கொண்டு கொள்கை ரீதியா பேசணும். `மிஸ்டர் பிரைம் மினிஸ்டர்' என்று சொல்லக்கூடிய அளவுக்கு விஜய் இன்னும் வளரல. நீங்க இன்னும் வளரல.. அரசியல் பாடம் கத்துக்கிட்டு பேசுங்க. எதை பேசுகிறோம், யாரைப்பற்றி பேசுகிறோம், எதற்காக பேசுகிறோம் என்று கவனத்துடன் பேச வேண்டும்” என்றார்.



