“பிறகு ஏன் ஆளுநரை சந்தித்தார்?”- விஜய்க்கு சரத்குமார் கேள்வி

ஆளுநரே வேணாம்னு சொல்லிட்டு விஜய் எதுக்கு போய் அவர பாத்தாருனு தெரியல... இதுலயே அவர் கொள்கை என்னனு தெரிஞ்சிப் போச்சு என நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை தியாகராய நகரில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகமான கமலாலயத்தில் பாஜக நிர்வாகிகளான சரத்குமார் மற்றும் குஷ்பூ ஆகியோர் தேசியக் கொடியை ஏற்றி வைத்தனர். இதில் மாநில துணைத்தலைவர்கள் மாநில செயலாளர்கள் மூத்த பாஜக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சரத்குமார், “பாஜக சகோதர, சகோதரிகள் 2026 ஆம் ஆண்டு சிறந்த ஆட்சியை தமிழகத்தில் உருவாக்க சபதம் ஏற்போம். விஜய் அவர்கள் முதல் மாநாட்டில் ஆளுநர் பதவி இருக்கக்கூடாது என்று கூறினார். பிறகு ஏன் ஆளுநரை சந்தித்தார் என்று தெரியவில்லை, கவர்னர் இருக்கலாமா என்று அவரிடம் கேட்க சென்றாரா என்று தெரியவில்லை... அதிலேயே அவர் கொள்கை தெரிந்துவிட்டது. நடிகர் அஜித்துக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி. அஜித்துக்கு பாராட்டுக்கள். விபத்துக்குள்ளான பிறகும் அவர் அணி வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் சிறந்த முறையில் வழிநடத்தி சென்றுள்ளார்.