"பாலியல் குற்றச்சாட்டு- என் கிட்ட வந்தா அடுத்த நிமிடமே ஆக்‌ஷன் எடுப்பேன்": சரத்குமார்

 
சரத்குமார்

கேரள நடிகர்கள் தவறு செய்துள்ளார்களா? இல்லையா? என்பதை நிரூபிக்கப்பட வேண்டியது அவர்களது கடமை என பாஜக பிரமுகர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.


மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக பிரமுகர் சரத்குமார், “நடிகர் சங்க தலைவராக இருந்தபோது பிக் பாஸ் நடிகை யாரும் என்னிடம் பாலியல் தொடர்பாக புகார் அளிக்கவில்லை. அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மீதே பாலியல் குற்றச்சாட்டு இருக்கிறது. நான் மற்றவர்களைப் போல் சாதாரண தலைவன் கிடையாது. “கேரளாவில் படப்பிடிப்பு ஒன்றில் கேரவனில் கேமரா வைக்கப்பட்டிருந்ததாக நடிகை ராதிகா பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்தார். என் மனைவிக்கு கடந்து போகக்கூடிய சக்தி இருந்ததால், இந்த புகாரை அப்போதே சொல்லாமல் கடந்து போயிருக்கலாம். ஆனால் எல்லோருக்கும் அந்த பக்குவம் இருக்காது. இதுவரை ஹேமா கமிட்டி அறிக்கைய்ல் 160 பக்கத்தை படித்துவிட்டேன்

கேரள நடிகர்கள் தவறு செய்துள்ளார்களா? இல்லையா? என்பதை நிரூபிக்கப்பட வேண்டியது அவர்களது கடமை. ஹேமா கமிட்டி போல அனைத்து இடத்திலும் கமிட்டி அமைக்க வேண்டும். ஏனெனில் அனைத்து இடங்களிலும் பாலியல் சீண்டல் உள்ளது. நாம் பெண்களை மதிக்க கற்றுக் கொண்டு பெண்களுக்கு பாதுகாப்பு அளித்தால் தவறுகள் நடைபெறாது. பெண்கள் மீதான பாலியல் தொல்லைகளை தடுக்க கடும் நடவடிக்கை தேவை. என்னிடம் வந்தால் அடுத்த நிமிடமே ஆக்‌ஷன் எடுப்பேன். e” என்றார்.