ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நடிப்பது சட்ட விரோத காரியமில்லை- சரத்குமார்

 
Sarathkumar

சமத்துவ மக்கள் கட்சியின் தலைவராக சரத்குமார் மீண்டும் தேர்வானார். ஈரோட்டில் நடந்த அக்கட்சியின் 7வது பொதுக்குழுவில் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். 

Image

பொதுக்குழுவுக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், “ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது தவறு, ஆன்லைன் சூதாட்ட விளம்பரத்தில், நான் மட்டுமே நடிக்கவில்லை, விளம்பரத்தில் நடிப்பது சட்ட விரோத காரியமில்லை. என்னை மட்டுமே இதில் குறைகூறக் கூடாது. அரசுதான் உரிய நடவடிக்கை எடுத்து இந்த சூதாட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும்.

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி விரைவில் போராட்டம் நடத்துவோம். வட மாநிலத்தவர்கள் வருகையை காவல் நிலையத்தில் பதிவு செய்து கொள்வது நல்லது. வரும் பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவோம்” என்றார்.