கட்சியை பாஜகவுடன் இணைத்தது ஏன்? - சரத்குமார் விளக்கம்!

 
sarathkumar

அகில இந்திய சமத்துவ கட்சியை பாஜகவுடன் இணைத்த காரணத்தை சரத்குமார் கூறியுள்ளார். 

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் இன்று தனது கட்சியை பாஜகவுடன் இணைத்தார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக மூத்த நிர்வாகிகள் மத்தியில் சரத்குமார் தனது கட்சியை பாஜகவுடன் இணைத்தார். அப்போது பேசிய அண்ணாமலை, சரத்குமாரை தமிழ்நாட்டில் அடைத்து வைக்க பாஜக விரும்பவில்லை. அவர் தேசிய அளவில் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என கூறினார். மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், சரத்குமார் தனது கட்சியை பாஜகவுடன் இணைத்துள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

tn

இந்த நிலையில், கட்சியை பாஜகவுடன் இணைத்த காரணத்தை சரத்குமார் கூறியுள்ளார். யாருடன் கூட்டணி, எவ்வளவு சீட், என்ன டிமேண்ட் வைப்பது என்பது மட்டும்தானா அரசியல்? மக்களுக்காக சேவை செய்ய வேண்டும் என்ற கொள்கை அடிபட்டுவிடுகிறதே! நாமும் அந்த வழியில் செல்ல வேண்டுமா என்ற கேள்வி என் மனதில் தோன்றியது. எனவே நமது சக்தியை, மோடி என்னும் சக்தியோடு இணைத்து செயல்பட வேண்டும் என்று சிந்தித்து முடிவெடுத்திருக்கிறேன். பெருந்தலைவர் காமராஜர் போல் ஆட்சி நடத்துகிறார் பிரதமர் மோடி. இது சமக-வின் முடிவல்ல. புதிய எழுச்சியின் தொடக்கம் என கூறினார்.