இந்திய அணி உலக கோப்பையை வெல்ல வாழ்த்துக்கள் - சரத்குமார்

 
sarathkumar

உலக கோப்பை இறுதிப் போட்டியில் இன்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதவுள்ள நிலையில், இந்திய அணிக்கு நடிகர் சரத்குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இறுதிப் போட்டி இன்று நடைபெறவுள்ளது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. பிற்பகல் சரியாக 2 மணிக்கு இறுதிப் போட்டி தொடங்குகிறது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன. நடப்பு உலக கோப்பை போட்டியில் தோல்வியே சந்திக்காத அணியாக திகழும் இந்திய அணி இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்ற தீவிரம் காட்டி வருகிறது. இதேபோல் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று 6வது முறையாக கோப்பையை கைப்பற்ற ஆஸ்திரேலிய அணி முனைப்பு காட்டி வருகிறது. 


இந்த நிலையில், இந்திய அணிக்கு நடிகர் சரத்குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட உலக கோப்பை இறுதிப் போட்டி இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது. இந்த உலக கோப்பை தொடரில், இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளும் இந்திய அணியை அவர்களின் நிலையான அபாரமான செயல்பாட்டிற்காக உற்சாகப்படுத்துவோம். 3வது முறையாக #உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற லட்சக்கணக்கானோரின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.