தமிழ்நாட்டில் மேலும் 2 புதிய கிளைகளை திறந்தது சாரதி ஃபைனான்ஸ்
தனது புதிய கிளைகளை திருப்பத்தூர் மற்றும் செங்கல்பட்டில் திறந்துள்ளதன் மூலம், கிளைகளின் எண்ணிக்கையை 19 ஆக உயர்த்தி உள்ளது. சிறு, குறு தொழில்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு விரைவான மற்றும் எளிதில் அணுகக்கூடிய நிதியுதவிக்கான தேவை அதிகரித்து வருவதால், தமிழ்நாடு எம்.எஸ்.எம்.இ. கடனுக்கான முக்கிய சந்தையாக தொடர்ந்து விளங்கி வருகிறது.

சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்களை (எம்.எஸ்.எம்.இ. - MSME) மையமாகக் கொண்டு செயல்படும் வங்கி சாரா நிதி நிறுவனமாகிய (NBFC) சாரதி ஃபைனான்ஸ் (Saarathi Finance), தமிழ்நாட்டில் தனது செயல்பாடுகளை மேலும் விரிவுபடுத்தும் வகையில் திருப்பத்தூர் மற்றும் செங்கல்பட்டில் இரண்டு புதிய கிளைகளைத் திறந்துள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் நிறுவனத்தின் கிளைகளின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. மாநிலம் முழுவதும் சிறு தொழில்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு முறையான கடன் வசதியை எளிதாகக் கிடைக்கச் செய்வதில் நிறுவனம் கொண்டுள்ள உறுதிப்பாட்டை இந்த விரிவாக்கம் மேலும் வலுப்படுத்துகிறது.
நாடு முழுவதும் ஆறு மாநிலங்களில் 100-க்கும் மேற்பட்ட கிளைகளை இந்நிறுவனம் தற்போது செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் எம்.எஸ்.எம்.இ. நிறுவனங்களுக்கு கடன் வழங்குதல் மற்றும் கடைசி நிலை வரையிலான நிதி இணைப்பை மேம்படுத்துதல் ஆகியவற்றில் தனது கவனத்தை நிறுவனம் தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது.
தமிழ்நாட்டின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள திருப்பத்தூர், வேளாண்மைத் துறையில் வேகமாக வளர்ந்து வரும் முக்கிய மையமாக உருவெடுத்து வருகிறது. இப்பகுதியில் பல்வேறு பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. மேலும், அருகிலுள்ள பகுதிகளில் தோல் உற்பத்தி உள்ளிட்ட வலுவான தொழில்துறை வளர்ச்சி காணப்படுகிறது. குறிப்பாக, தோல் உற்பத்தித் துறை குறிப்பிடத்தக்க ஏற்றுமதி சந்தையைக் கொண்டுள்ளது.
செங்கல்பட்டு, தமிழகத்தின் வேகமாக வளர்ந்து வரும் தொழில்துறை வழித்தடங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. மேலும், இது கிராண்ட் சதர்ன் டிரங்க் (GST) நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. உற்பத்தி, வர்த்தகம் மற்றும் சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளை உள்ளடக்கிய பெரிய மற்றும் பன்முகத்தன்மை கொண்ட எம்.எஸ்.எம்.இ. தளத்தை தமிழ்நாடு கொண்டுள்ளது. இதனால் முறையான கடன் வசதிக்கான முக்கிய சந்தையாக தமிழ்நாடு விளங்குகிறது. நபார்டு (NABARD) நிறுவனத்தின் 2025 26 ஆம் நிதி ஆண்டின் (FY 2025-26) மாநில அளவிலான முன்னுரிமைத் துறை கடன் திட்ட அறிக்கையின்படி, தமிழ்நாட்டின் மொத்த மதிப்பிடப்பட்ட ₹9.38 லட்சம் கோடி முன்னுரிமைத் துறை கடன் வாய்ப்பில், எம்.எஸ்.எம்.இ. துறையின் பங்கு சுமார் 37% ஆகும். மாநிலம் முழுவதும் உள்ள தொழில்களின் அதிகரித்து வரும் கடன் தேவைகள், முறையான நிதியுதவியை கடைசி நிலை வரையிலான வாடிக்கையாளர்களுக்கு கொண்டு சேர்ப்பதற்கான வாய்ப்பை கடன் வழங்குநர்களுக்கு உருவாக்குகின்றன.
இந்தச் சூழலில், திருப்பத்தூர் மற்றும் செங்கல்பட்டில் சாரதி ஃபைனான்ஸ் தனது கிளைகளைத் திறந்துள்ளதன் நோக்கம், உள்ளூர் தொழில்முனைவோர் மற்றும் சிறு தொழில் நிறுவனங்களுக்கு தனது கடன் வசதிகளை மேலும் நெருக்கமாகக் கொண்டு செல்வதாகும். புதிய கிளைகள் மூலம் அப்பகுதியில் உள்ள தொழில்களுடன் நிறுவனம் நேரடியாகவும், நெருக்கமாகவும் தொடர்பு கொண்டு, குறிப்பாக செயல்பாட்டு மூலதனம் மற்றும் தொழில் விரிவாக்கம் தொடர்பான அவர்களின் நிதித் தேவைகளைப் புரிந்துகொள்ள முடியும். சாரதி ஃபைனான்ஸ் சொத்து அடமானக் கடன் (Loan Against Property – LAP) வசதிகளை வழங்குகிறது. இதன் கீழ் ₹5 லட்சம் முதல் ₹35 லட்சம் வரையிலான கடன் தொகைகள் வழங்கப்படுகின்றன. இதன் மூலம் தொழில்முனைவோர் தங்களது சொத்துகளின் மதிப்பை பயன்படுத்தி, தங்கள் தொழில் தேவைகளுக்கு நிதி திரட்ட முடியும். ஏப்ரல் 2025-ல் செயல்பாடுகளைத் தொடங்கிய சாரதி ஃபைனான்ஸ், போதுமான நிதிச் சேவைகள் கிடைக்காத நகர்ப்புற மற்றும் கிராமப்புற சந்தைகளில் தனது கிளை வலையமைப்பை தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறது. நாடு முழுவதும் ஆறு மாநிலங்களில் 100-க்கும் மேற்பட்ட கிளைகளை நிறுவனம் தொடங்கியுள்ளது. எம்.எஸ்.எம்.இ. கடன் வழங்குதல் மற்றும் கடைசி நிலை வரையிலான நிதி இணைப்பை மேம்படுத்துதல் ஆகியவற்றில் நிறுவனத்தின் தொடர்ச்சியான கவனத்தை இந்த விரிவாக்கம் எடுத்துக்காட்டுகிறது.
![]()
நிறுவனத்தின் தமிழ்நாடு விரிவாக்கம் குறித்து சாரதி ஃபைனான்ஸின் தலைமை கடன் அதிகாரி (Chief Credit Officer) திரு. ரோனக் ஜெயின் கூறுகையில், “சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழில்முனைவோரின் வலுவான அடித்தளத்தைக் கொண்டிருப்பதால், தமிழ்நாடு, சாரதி ஃபைனான்ஸுக்கு முக்கியமான சந்தையாக உள்ளது. மாநிலத்தில் எங்களது கிளைகளின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளதன் மூலம், எங்களது வாடிக்கையாளர்களுக்கு இன்னும் நெருக்கமாக எங்களது இருப்பை வலுப்படுத்தி வருகிறோம். திருப்பத்தூர் மற்றும் செங்கல்பட்டு பகுதிகளில் உள்ள உள்ளூர் தொழில் நிறுவனங்களுடன் நெருக்கமாகப் பணியாற்றி, அவர்களின் நிதித் தேவைகளை சிறப்பாகப் புரிந்துகொள்ள இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது. தொழில்முனைவோரின் செயல்பாட்டு மூலதனத் தேவைகள், தொழில் விரிவாக்கம் மற்றும் வளர்ச்சி இலக்குகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், எளிதான, விரைவான மற்றும் சரியான நேரத்தில் கடன் வசதிகளை வழங்குவதில் எங்களது கவனம் தொடர்ந்து இருக்கும்” என்றார்.
“தமிழ்நாட்டிலும் இந்தியாவின் பிற பகுதிகளிலும் எங்களது செயல்பாடுகளை தொடர்ந்து விரிவுபடுத்தி வரும் நிலையில், நிலையான வளர்ச்சி, பொறுப்பான இடர் மேலாண்மை மற்றும் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட கடன் வழங்கும் அமைப்பை உருவாக்குதல் ஆகியவற்றில் எங்களது கவனம் தொடர்ந்து இருக்கும். இதன் மூலம் எங்களது வாடிக்கையாளர்கள் மற்றும் பங்குதாரர்களுக்கு நீண்டகால மதிப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
சாரதி ஃபைனான்ஸ் பற்றி
சாரதி பைனான்ஸ் அண்ட் கிரெடிட் பிரைவேட் லிமிடெட் (Saarathi Finance & Credit Pvt Ltd.) என்பது இந்தியாவின் நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில் உள்ள எம்.எஸ்.எம்.இ. நிறுவனங்களுக்கு எளிதில் அணுகக்கூடிய மற்றும் அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட கடன் வசதிகளை வழங்குவதில் கவனம் செலுத்தும் ஒரு வங்கி சாரா நிதி நிறுவனமாகும். எம்.எஸ்.எம்.இ. துறையில் நிலவும் ₹44 லட்சம் கோடி கடன் இடைவெளியை குறைப்பதை நோக்கமாகக் கொண்டு செயல்படும் சாரதி ஃபைனான்ஸ், தொழில்நுட்பப் புதுமைகளையும் உள்ளூர் சந்தைகள் குறித்த ஆழமான புரிதலையும் ஒருங்கிணைத்து, சிறு தொழில் உரிமையாளர்களின் தனித்துவமான தேவைகளுக்கு ஏற்ற கடன் வசதிகளையும் வழங்குகிறது. “Aap Akele Nahi Hai” (“நீங்கள் தனியாக இல்லை”) என்ற வழிகாட்டும் கொள்கையுடன் இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

