"பொறுத்தது போதும் பொங்கி எழு" - பொங்கலுக்கு வெளியாகும் சந்தானம் திரைப்படம்..!

 
1 1

”சர்வர் சுந்தரம்” திரைப்படம் பொங்கல் விடுமுறைகளை முன்னிட்டு வரும் ஜன.14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து, படக்குழு வெளியிட்டுள்ள விடியோவில் “பொறுத்தது போதும் பொங்கி எழு” எனும் நகைச்சுவை வசனம் பொங்கல் பண்டிகையைக் குறிப்பதாக அமைந்துள்ளது. முன்னதாக, நடிகர் விஜய்யின் “ஜன நாயகன்” திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டதிலிருந்து ஏராளாமான திரைப்படங்கள் வெளியிட்டிற்குத் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் ஆனந்த் பால்கி இயக்கத்தில் நடிகர் சந்தானம் நாயகனாக நடித்து, கடந்த 2017ம் ஆண்டு உருவான திரைப்படம் தான் “சர்வர் சுந்தரம்”. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவான இப்படத்தின் வெளியீடு சுமார் 9 ஆண்டுகளாக பல்வேறு காரணங்களால் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வந்தது.

இயக்குநர் ஆனந்த் பால்கி இயக்கத்தில் நடிகர் சந்தானம் நாயகனாக நடித்து, கடந்த 2017ம் ஆண்டு உருவான திரைப்படம் தான் “சர்வர் சுந்தரம்”. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவான இப்படத்தின் வெளியீடு சுமார் 9 ஆண்டுகளாக பல்வேறு காரணங்களால் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது பொங்கல் ட்ரீட்  ஆக வெளியாகிறது.