ஏர்வாடி தர்ஹாவில் மதநல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா!

 
yervadi yervadi

உலக புகழ்பெற்ற ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹாவில் மதநல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை ஏர்வாடி சுல்தான் சையது இப்ராஹிம் பாதுஷா ஒளி உள்ளார் தர்காவின் 851ம் ஆண்டு மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் உள்ளூர் மக்கள் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.  சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த திருவிழாவில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர்.