பள்ளி வளாகத்தில் கார் புகுந்து மோதியதில் யுகேஜி மாணவி உயிரிழப்பு! தென்காசியில் சோகம்

 
ச்

தென்காசி அருகே பள்ளி வளாகத்தில் கார் புகுந்து மோதியதில் 4 வயது யுகேஜி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Image


தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள புளியங்குடி சிந்தாமணி  உள்ள   தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி செயல்பட்டு வருகிறது. நெற்கட்டும்செவல் பகுதியைச் சேர்ந்த மாரிசாமி என்பவரது மகள் 4 வயது குழந்தை பள்ளியில் பயின்று வருகிறார். இன்று பள்ளி வளாகத்தில் கார் பின்புறமாக வந்த போது குழந்தை மீது கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே குழந்தை உயிரிழந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அவர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில் நெல்லை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் சிசிடிவி ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி நிர்வாகம் குழந்தையின் இறப்பை உடனடியாக குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்காததாக கூறி பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க கோரி குழந்தையின் உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் செங்கோட்டை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில் பள்ளி அருகிலேயே உள்ள அதே நிர்வாகத்தை சேர்ந்த தனியார் மருத்துவமனை முகப்பு கண்ணாடி ஆத்திரத்தில் அடித்து நொறுக்கப்பட்டது. தனியார் பள்ளிக்கு மருத்துவமனைக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதால் சிந்தாமணி பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.