தோழர் சங்கரய்யா உடலுக்கு அரசு மரியாதையுடன் இன்று இறுதிச்சடங்கு

 
tn

மறைந்த தோழர் சங்கரய்யா உடலுக்கு அரசு மரியாதையுடன் இன்று இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.

tn

தகைசால் தமிழர் முதுபெரும் பொதுவுடைமைப் போராளி - விடுதலைப் போராட்ட வீரர் தோழர் என். சங்கரய்யா  வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை காலமானார் . அவரது உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , அமைச்சர்கள் தா.மோ. அன்பரசன், சேகர்பாபு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

tn

விடுதலைப் போராட்ட வீரராக, சட்டமன்ற உறுப்பினராக, அரசியல் கட்சித் தலைவராக அவர் தமிழ்நாட்டுக்கு ஆற்றிய தொண்டினைப் போற்றும் விதமாக அவரது திருவுடலுக்கு அரசு மரியாதையுடன் பிரியாவிடை அளிக்கப்படும்  என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

tn

அதன்படி சங்கரய்யாவின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்குப் பிறகு, காலை 10 மணியளவில் பெசன்ட் நகர் மின்மயானத்துக்கு கொண்டுச் செல்லப்பட்டு, அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என்று கவனிக்கத்தக்கது.