"சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க வேண்டும்" - அண்ணாமலை பேட்டி

"சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க வேண்டும்" என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கும் கோப்பில் ஆளுநர் கையெழுத்திட மறுப்பு தெரிவித்துள்ளார். இதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவுத்துள்ளனர். இதன்காரணமாக க மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்க உள்ளேன் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க வேண்டும்; தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக போராடியவர்; சங்கரய்யா உடன் வேறு யாருக்கேனும் பரிந்துரைத்து பட்டியல் அனுப்பப்பட்டதா என தெரியவில்லை;
ஒப்புதல் அளிக்காதது ஏன் என ஆளுநர் மாளிகைதான் விளக்கம் அளிக்க வேண்டும் . தமிழ்நாட்டிலும் சாதிய வன்கொடுமைகள் நடைபெறுவது அதிர்ச்சி அளிக்கிறது; சாதிய வன்கொடுமைகளில் ஈடுபடுபவர்களுக்கு கடும் தண்டனை அளிக்க வேண்டும் என்றார்.