"பொதுவுடைமைச் சிந்தனை எனும் கலங்கரை விளக்கம்" - சங்கரய்யாவுக்கு முதல்வர் வாழ்த்து!

 
tn

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யாவின் 101வது பிறந்தநாளையொட்டி  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

“சங்கரய்யாவின் தியாகத்தையும் எளிமையையும் போற்றுகிறேன்” மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தோழரும் – தமிழ்நாட்டு அரசியலில் மூத்த தலைவரும் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடக்க கால உறுப்பினருமான என்.சங்கரய்யா இன்று தனது 101 ஆவது  பிறந்தநாளை கொண்டாடுகிறார். தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களில் 100 வயதைத் தொட்டு, பொதுவாழ்வில் உள்ள அனைவருக்கும் வழிகாட்டும் தியாக வாழ்வுக்குச் சொந்தக்காரராகத் திகழ்கிறார் சங்கரய்யா. சுதந்திரப் போராட்ட வீரராக, பொதுவுடைமை இயக்கத்தின் போராளியாக,  பத்திரிகையாளராக, சட்டமன்ற உறுப்பினராக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழுச் செயலாளராக பல்வேறு  பரிமாணங்களை கொண்டவர் சங்கரய்யா. 

“சங்கரய்யாவின் தியாகத்தையும் எளிமையையும் போற்றுகிறேன்” மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

8 ஆண்டு சிறை, 3 ஆண்டு தலைமறைவு வாழ்க்கை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கிய 32 பேரில் ஒருவர், 3 முறை சட்டமன்ற உறுப்பினர் என மக்களுக்காக அரும்பாடுபட்டவர். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "பொதுவுடைமைச் சிந்தனை எனும் கலங்கரை விளக்கத்தை அடுத்த தலைமுறையினருக்கு அடையாளம் காட்டும் #தகைசால்தமிழர் தோழர். சங்கரய்யா அவர்களுக்கு, 101-ஆவது பிறந்தநாளில் உங்களில் ஒருவனாக வாழ்த்துகளைப் பகிர்கிறேன்! போராட்டங்களும் தியாகங்களும் நிறைந்த அவர் இன்னும் பல்லாண்டு வாழ்க!" என்று பதிவிட்டுள்ளார்.