மருத்துவர் பத்ரிநாத் அவர்களின் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது - தினகரன்

 
ttv

நாட்டின் மிகப்பெரிய தொண்டு நிறுவன மருத்துவமனைகளில் ஒன்றான சங்கர நேத்ராலயா மருத்துவமனையின் நிறுவனர் பத்மபூஷன் பத்ரிநாத் அவர்களின் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது என்று தினகரன் தெரிவித்துள்ளார்.

ttv

இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது சமூகவலைத்தள பக்கத்தில், நாட்டின் மிகப்பெரிய தொண்டு நிறுவன மருத்துவமனைகளில் ஒன்றான சங்கர நேத்ராலயா மருத்துவமனையின் நிறுவனர் பத்மபூஷன் திரு.பத்ரிநாத் அவர்களின் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது.

லாப நோக்கமற்ற நிர்வாகம், ஏழை, எளிய மக்களுக்கு இலவச சிகிச்சை, இளம் மருத்துவர்களுக்கு பயிற்சி என நாட்டின் கண் மருத்துவ சிகிச்சையை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் சென்ற திரு.பத்ரிநாத் அவர்களின் மறைவு மருத்துவத்துறைக்கு பேரிழப்பாகும்.

tn

லட்சக்கணக்கான மக்களுக்கு பார்வையளித்த திரு.பத்ரிநாத் அவர்களை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், சக மருத்துவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.