தூய்மைப்பணியாளர் பலியான சம்பவம்- மின் கம்பி செல்லும் வழித்தடங்களை ஆய்வு செய்ய உத்தரவு

 
மின் கம்பி வழித்தடங்கள் தரையில் விபத்து

சென்னையில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த தூய்மைப் பணியாளர் மரணம் அடைந்த சம்பவம் எதிரொலியாக சென்னை முழுவதும் மின் கம்பி செல்லும் வழித்தடங்களை ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. 

அறுந்து விழுந்த மின் கம்பி மாதவரத்தில் பெரும் விபத்து தவிர்ப்பு


சென்னையில் சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையின் காரணமாக மின்சாரம் பாய்ந்து தூய்மைப் பணியாளர் மரணம் அடைந்தார். இந்த சம்பவத்தின் எதிரொலியாக  சென்னை முழுவதும் மின் கம்பி செல்லும் வழித்தடங்களை ஆய்வு செய்ய மின்சாரத்துறை உத்தரவிட்டுள்ளது. இதன்படி, பொறியாளர்கள் அனைவரும் தங்களின் பகுதிகளுக்கு உட்பட்ட பகுதியில் மின் கம்பிகள் பூமிக்கு வெளியே தெரியாமல் இருக்குமாறு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பாக ஆய்வின் போது பூமிக்கு வெளியே மின் கம்பிகள் இருந்தால் அவற்றை 4 நாட்களுக்குள் சரி செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் பொறியாளர்களுக்கு மின்சாரத்துறை உத்தரவிட்டுள்ளது.