பிரபாகரனை சீமான் சந்தித்தாரா? உண்மையை உடைத்த இயக்குநர்
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனுடன் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இருப்பது போன்று வெளியான புகைப்படம் நான் எடிட் செய்தது என திரைப்பட இயக்குநர் சங்ககிரி ராஜேந்திரன் கூறியுள்ளார்;
.
சீமான், பிரபாகரன் சந்திப்பு பற்றி சமூக வலைதளங்களில் சமீப காலமாகவே மிகவும் கார சாரமாக விவாதிக்கப்படுவது வழக்கம். இதுபற்றிய சர்ச்சைகளுக்கு ஏற்கனவே சீமான் பல முறை விளக்கம் அளித்திருக்கிறார். அதாவது 3 நிமிடங்களே பிரபாகரனை சந்தித்ததாக சீமான் சொல்கிறார். அத்துடன்,பிரபாகரனை சந்தித்தபோது சீமான் ஒரு சினிமா இயக்குனராகவே சென்றிருந்தார். அரசியல்வாதியாக அல்ல. மேலும், பாலு மகேந்திராவை பார்க்கவே பிரபாகரன் விரும்பினார். அவருக்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தால், அவருக்குப் பதிலாக சீமானை அழைத்துச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் திரைப்பட இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் தனது முகநூல் பக்கத்தில், “சீமான் பிரபாகரனை சந்திக்கவே இல்லை. சீமானுடன் பிராபாகரன் இருப்பது போன்ற அந்த போட்டோவை எடிட் பண்ணிக் கொடுத்ததே நான்தான்..” எனக் குறிப்பிட்டுள்ளார்.


