சி.வி.சண்முகத்துக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு

 
s

பொள்ளாச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர் விஜயபாஸ்கர் சி.வி சண்முகம்,திண்டுக்கல் சீனிவாசன், உருவ பொம்மைகளுக்கு செருப்பு மாலை அணிவித்து கம்பத்தில் கட்டி விட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் ஏற்பட்டு வரும் பாலியல் சம்பவங்களை கண்டித்து சில தினங்களுக்கு முன்பு அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர்கள் சிவி சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன், எம்ஆர் விஜயபாஸ்கர் சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுன் பெண்களை இழிவுபடுத்தி
பேசியதாக கூறப்படுகிறது. இதனை கண்டிக்கும் வகையில் பொள்ளாச்சி நகரின் முக்கிய பகுதிகளான தேர் நிலையம், மத்திய பேருந்து நிலையம், காந்தி சிலை சிக்னல், திருவள்ளுவர் திடல் போன்ற பகுதிகளில் முன்னாள் அமைச்சர்களான திண்டுக்கல் சீனிவாசன், சிவி சண்முகம், எம்ஆர் விஜயபாஸ்கர், அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுன் உருவ பொம்மைகளுக்கு செருப்பு மாலை அணிவித்து பெண்களுக்கு எதிராக அதிமுக என்ற தலைப்பில் பெண்களை இழித்தும் பழித்தும் பேசி வரும் அதிமுகவினரை கண்டிக்கிறோம். கண்டிக்கிறோம் பொள்ளாச்சி அனைத்து மகளிர் என வாசகங்களுடன் ரவுண்டானாக்களில் உள்ள கம்பங்களில் கட்டி வைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காவல்துறையினர் உடனடியாக அந்த கட்டவுட்டுகளை அகற்றினர்.

இந்த சம்பவம் அதிமுகவினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் அதிமுக நகர செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமையில் ஏராளமான அதிமுகவினர் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் வரவு செலவு பார்வையாளர் ஸ்ரீதர் டோரா, சார் ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான ராமகிருஷ்ண சாமியை சந்தித்து அதிமுக முன்னாள் அமைச்சர்களை இழிவுபடுத்தும் வகையில் செருப்பு மாலை அணிவித்து கம்பத்தில் கட்டி வைத்த நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தனர்.