மணல் சுரங்கப் பணமோசடி வழக்கு - தமிழகம் முழுவதும் அமலாக்கத்துறையினர் சோதனை

 
surana raid

புதுக்கோட்டையில் தொழிலதிபர் ராமச்சந்திரன் என்பவருக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.

RAID TTN

மணல் சுரங்கப் பணமோசடி வழக்கில் தமிழகம் முழுவதும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.மாநிலத்தில் மணல் அள்ளுதல் மற்றும் சில்லறை விற்பனை ஒப்பந்தம் வைத்திருக்கும் எஸ் ராமச்சந்திரன், ரத்தினம் மற்றும் பிறரின் வீடுகள் உட்பட 40 க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். 

tn

புதுக்கோட்டையில் தொழிலதிபர் ராமச்சந்திரன் என்பவருக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வரும் நிலையில் துப்பாக்கி ஏந்திய சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். கரூர், திருச்சி, தஞ்சாவூர், வேலூர், விழுப்புரம், தி.மலை, புதுக்கோட்டை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் விளாத்திகுளத்தில் சோதனை நடத்தப்பட்டு வரும் நிலையில் சட்டவிரோத சுரங்க முறைகேட்டில் ஈடுபட்டதாக வந்த புகாரில் சோதனை என தகவல் வெளியாகியுள்ளது.