சனாதன சர்ச்சை வழக்கு - இன்று தீர்ப்பு

 
Udhayanidhi Stalin

சென்னையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், டெங்கு, மலேரியாவை போன்று சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும் என பேசினார். அவரது பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்களும் இந்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்தனர். உத்தரபிரதேசத்தை சேர்ந்த சாமியார் ஒருவர் உதயநிதியின் தலையை கொண்டு வந்தால் 10 கோடி ரூபாய் வழங்குவதாக கூறினார். இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் உள்ளிட்ட பல்வேறு நீதிமன்றங்களில் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.

udhayanidhiஇந்நிலையில் சனாதனம் விவகாரத்தில் அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு, திமுக எம்.பி. ஆ.ராசாவுக்கு எதிராக இந்து முன்னணி நிர்வாகிகள் தொடர்ந்த கோ-வாரண்டோ வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது9 நாட்கள் நடந்த விசாரணைக்கு பிறகு, கடந்த நவ.23 ஆம் தேதி தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் வழக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று தீர்ப்பளிக்கிறது .