சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ்

 
s

தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த சாம்சங் தொழிலாளர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள்

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்ச்சத்திரத்தில் உள்ள சாம்சங் தொழிற்சாலையில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். முறையான ஊதிய உயர்வு, எட்டு மணி நேர வேலை, தொழிற்சங்கம் அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 9 ஆம் தேதி முதல் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர். இதுதொடர்பாக அமைச்சர்கள் முன்னிலையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் தொழிற்சங்கம் அமைப்பது ஒன்றைத் தவிர மற்ற கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனாலும், தொழிற்சங்கம் தொடர்பான கோரிக்கையை முன்வைத்து சிஐடியு போராட்டம் நடத்தி வருகிறது.


இந்நிலையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த சாம்சங் தொழிலாளர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டத்தை அடுத்து போராட்டம் வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.