சாம்சங் தொழிலாளர் போராட்டத்திற்கு விரைந்து தீர்வு காண வேண்டும்- மு.க.ஸ்டாலின்
சாம்சங் தொழிலாளர் போராட்டத்திற்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் சாம்சங் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் சிஐடியு சார்பில் தொழிற் சங்கம் தொடங்கப்பட்டது. இந்த சங்கத்தை அங்கீரிக்க வேண்டும், தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இதுதொடர்பாக தொழிலாளர் துறை உட்பட பல்வேறு தரப்பினருடன் நடைபெற்ற பேச்சுவார்தைகள் தோல்வியில் முடிந்தன. தற்போது 20 நாட்களுக்கு மேல் சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சாம்சங் தொழிலாளர் போராட்டத்திற்கு விரைந்து தீர்வு காண முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இதன்படி, அமைச்சர்கள் டிஆர்பி.ராஜா, தா.மே.அன்பரசன், கணேசன் ஆகியோர் இணைந்து இந்த பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும் முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். ஏற்கனவே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படாத நிலையில் டிஆர்பி.ராஜா தா.மே.அன்பரசன், கணேசன் ஆகியோர் தலையிட்டு தீர்வு காண முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
முதலமைச்சர் அறிவுறுத்தலை தொடர்ந்து டிஆர்பி.ராஜா மற்றும் தா.மே.அன்பரசன், கணேசன் ஆகியோர் வரும் திங்கள் கிழமை தொழிலாளர்கள் மற்றும் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளனர்.