சாம்சங் ஆலையை முற்றுகையிட்டு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

 
samsung

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் பகுதியில் சாம்சங் ஆலையை முற்றுகையிட்டு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள் 23 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊழியர்கள் ஆலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 23 தொழிலாளர்களை பணியிட நீக்கம் செய்ததை கண்டித்து சிஐடியு தொழிற்சங்க தொழிலாளர்கள் இன்று வரை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொழிற்சாலை நிர்வாகம், தொழிற்சாலை ஊழியர்கள் சங்கத்தினர் ஆகியோர் தொழிலாளர் நல ஆணையத்தின் முன்பாக 10 முறை பேச்சுவார்த்தைகள் நடைபெற்றும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால், பணிக்கு வரத் தயாராக உள்ளேன் எனும் கடிதத்துடன் தொழிலாளர்கள் வரத் தொடங்கியுள்ளனர்.தொழிற்சாலை பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.