காங்.கட்சி பொறுப்பில் இருந்து சாம்பிட்ரோடா திடீர் ராஜினாமா..!

 
1

காங்கிரஸ் கட்சியின் அயலக பிரிவு தலைவர் சாம்பிட்ரோடா வட இந்தியர்கள் வெள்ளையர்கள் போன்றும், தென்இந்தியர்கள் ஆப்பிரிக்கர்கள் போன்றும் உள்ளனர் எனத் தெரிவித்திருந்தார். இதற்கு பா.ஜனதா தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில், காங்கிரஸ் கட்சியின் அயலக பிரிவு தலைவர் பதவியை சொந்த விருப்பத்தின் பேரில் சாம்பிட்ரோடா ராஜினாமா செய்துள்ளதாகவும் சாம்பிட்ரோடாவின் ராஜினாமாவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஏற்றுக்கொண்டுள்ளார் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தகவல் தெரிவித்துள்ளார்.