இரா. சம்பந்தன் மறைவு - ஜவாஹிருல்லா இரங்கல்

 
rr

இலங்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மறைவுக்கு ஜவாஹிருல்லா இரங்கல் தெரிவித்துள்ளார்.

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ வெளியிடும் இரங்கல் அறிக்கை:-

இலங்கை  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவரும், இலங்கைத் தமிழரசுக் கட்சிமுன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் மறைந்தார் என்றசெய்தியை அறிந்து மிகவும் துயருற்றேன். 

tt

இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவராகப் பதவி வகித்த சிறப்புக்கு உரியவர். இலங்கையில் சட்டம் பயின்ற இவர் ஆறு முறை நாடாளுமன்ற உறுப்பினராகத்தேர்ந்தெடுக்கப்பட்டவர். 91 வயது மூப்பின் காரணமாக மறைவெய்தி இருக்கிறார். 

இலங்கைத் தமிழர்களின் உரிமைக்காகத் தொடர்ந்து 50 ஆண்டுகளுக்கு மேலாகஇலங்கை நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பியவர்.

jawahirullah

சர்வதேச அளவில் நடைபெறும் இலங்கைத் தமிழர்கள் தொடர்பான கூட்டங்களில், முக்கிய பிரதிநிதியாகவும் இரா. சம்பந்தன் பங்கேற்றுள்ளார். சமூக நல்லிணக்கம் தழைத்தோங்க அயராது பாடுபட்டார். அவரை பிரிந்து வாடும் இலங்கைத் தமிழர்களுக்கும் அவரது கட்சியினர்களுக்கும்மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.