சமயபுரம் இரட்டை கொலை: நடுங்க வைக்கும் பின்னணி... தப்பி ஓட முயன்ற ரவுடியை சுட்டுப் பிடித்த அதிரடி போலீஸ்!

 
police

திருச்சி அருகே 2 சிறுவர்கள் தீபாவளியன்று கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். இச்சம்பவம் குறித்து போலீசார், அங்குள்ள சிசிடிவி காட்சி பதிவுகளை கைப்பற்றி விசாரித்தனர்

3 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகள் தேடப்பட்டு வருகின்றனர். பழிக்கு பழியாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய சிவனேசன் என்பவரை போலீசார் கைது செய்ய முயன்றுள்ளனர்.

அப்போது, போலீசாரை தாக்கிவிட்டு அவர் தப்பியோட முயற்சித்துள்ளார்.

பாதுகாப்புகருதி சிவனேசனை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். காயமடைந்த அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இரட்டைக்கொலை வழக்கில் தொடர்புடைய நபரை போலீசார் சுட்டுப்பிடித்த சம்பவம் திருச்சியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.