சமந்தாவின் 'மா இன்டி பங்காரம்' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

 
1

சமந்தா தயாரித்து நடித்துள்ள புதிய திரைப்படமான 'மா இன்டி பங்காரம்' கடந்த ஜூன் மாதம் 19ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. பி.வி. நந்தினி ரெட்டி இயக்கியுள்ள இந்தப் படத்தில் கவுதமி, மஞ்சுஷா, திகந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு இயக்குநரும், சமந்தாவின் கணவருமான ராஜ் நிடிமொரு கதை எழுதியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்தப் படம் தமிழில் 'எங்கள் தங்கம்' என்ற பெயரில் வெளியானது.

'மா இன்டி பங்காரம்' திரைப்படம் 22 நாட்களில் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படம் முதல் நாளிலேயே சுமார் ரூ.13 கோடி வசூல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இப்படம் விரைவில் ரூ.200 கோடி வசூலை ஈட்டி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தெலுங்கு சினிமா வரலாற்றில் பெண் நாயகி படங்களில் அதிகம் வசூலித்து, முதலிடத்தைப் பிடித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், 'மா இன்டி பங்காரம்' திரைப்படம் வரும் ஜூலை 17 ஆம் தேதி ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.