கல்விக் கண் திறந்த பெருந்தலைவர் காமராசருக்குப் புகழ் வணக்கம்..! - மு.க.ஸ்டாலின்..

 
MKStalin - Kamarajar MKStalin - Kamarajar


முன்னாள் முதலமைச்சர் காமராஜர் பிறந்தநாளையொட்டி  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், புகழாரம் சூட்டியுள்ளார்.  

கர்ம வீரர், பெருந்தலைவர், கல்வி கண் திறந்தவர் என போற்றப்படும்  முன்னாள் முதலமைச்சர் காமராசரின்  பிறந்தநாள், இன்று ( ஜூலை 15) கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் 1954 முதல் 1963 வரை தொடர்ந்து 3 ஆண்டுகள் முதலமைச்சராக பதவி வகித்த காமராசர், கல்விக்காக எண்ணற்ற தொண்டுகளை ஆற்றியுள்ளார்.  அனைவரும் பள்ளி வந்து படிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, கட்டாய கல்வியை கொண்டு வந்த காமராசர், பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தையும் அறிமுகப்படுத்தினார். இதனையொட்டி கடந்த 2006ம் ஆண்டு முதல் அவரது பிறந்தநாளை தமிழ்நாடு அரசு கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடி வருகிறது.  

காமராசர்

 இந்நிலையில் காமராசரின் பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.  இதுகுறித்த அவரது எக்ஸ் தள பதிவில், “அன்று பள்ளிகளில் இட்டது மதிய உணவல்ல; நூற்றாண்டுக் கல்விக் கனவுக்கான அடித்தளம்!

நல்லவேளை, “பள்ளியில் கல்விதான் கொடுக்க வேண்டும்; சோறு போட அது என்ன ஹோட்டலா?” என்று அதிமேதாவியாய்ப் பேசும் அறிவுக்கொழுந்துகள் இல்லை அன்று. அதனால்தான், எத்தனை நன்மை தமிழ்நாட்டிற்கு இன்று!

கல்விக் கண் திறந்த பெருந்தலைவர் காமராசருக்குப் புகழ் வணக்கம்!” என்று குறிப்பிட்டுள்ளார்.